/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடுகள் வேட்டை; தெரு நாய்கள் சேட்டை
/
ஆடுகள் வேட்டை; தெரு நாய்கள் சேட்டை
ADDED : ஜூன் 22, 2024 04:56 PM

திருப்பூர் மாவட்டத்தில், நகர மற்றும் கிராமப்புறங்களில் தெரு நாய்கள், அதிகரித்து வருகின்றன. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து, இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு அனுமதி வழங்கியும், உள்ளாட்சி நிர்வாகங்களில் நிலவும் நிதிப்பற்றாக்குறை, தெரு நாய்களை பிடித்து வர ஆட்கள் கிடைக்காததது போன்ற பல பிரச்னைகளால், கருத்தடை பணி கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. வெள்ளகோவில், காங்கயம் பகுதியில் தெரு நாய்களால், ஆடுகள் கொல்லப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன், வீரணம்பாளையம் கிராமம், பகவதிபாளையத்தில் வேலுசாமி என்பவரது விவசாய நிலத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகளில், 3 ஆடுகளை தெரு நாய்கள் கடித்து கொன்றன. சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த, 3 மாதங்களில் மட்டும், 200க்கும் மேற்பட்ட ஆடுகளை தெரு நாய்கள் கடித்து கொன்றுள்ளன என, அங்குள்ள விவசாயிகள் குமுறுகின்றனர்.
காரணம் என்ன?
காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் சாலையோர அசைவ உணவகங்களில் இறைச்சி, இறைச்சிக் கழிவுகளை உண்கின்றன. அத்தகைய உணவு கிடைக்காத போது, கிராமப்புறங்களுக்கு வந்து ஆடுகளை, கூட்டமாக வேட்டையாடுகின்றன.
நாய்களின் கொடூர தாக்குதலில் பலியாகும் ஆடுகளில் பாதியைத் தின்று விட்டு, சென்று விடுகின்றன எனவும், அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
----
காங்கயம், வீராணம்பாளையத்தில் தெருநாய்களால் கொல்லப்பட்ட ஆடுகள்.
தெருநாய் கொடூர படம் வைக்கவும்