/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் கட்டணத்துக்கு மானியம் சிலை தயாரிப்போர் எதிர்பார்ப்பு
/
மின் கட்டணத்துக்கு மானியம் சிலை தயாரிப்போர் எதிர்பார்ப்பு
மின் கட்டணத்துக்கு மானியம் சிலை தயாரிப்போர் எதிர்பார்ப்பு
மின் கட்டணத்துக்கு மானியம் சிலை தயாரிப்போர் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 28, 2024 12:14 AM

பல்லடம்;விநாயகர் சதுர்த்தி விழா, ஆண்டுதோறும் ஆவணி மாதம் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சிலை தயாரிப்பை மட்டுமே நம்பியுள்ள தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் மின் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த சிலை தயாரிப்பாளர் கார்த்திக் கூறியதாவது:
கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும், 200க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரித்து, திருப்பூர், பல்லடம், உடுமலை, பாலக்காடு, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகிறோம்.
கொரோனாவுக்கு பின் தொழில் சிறிது சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்., முதல் செப்., வரை ஆனா மாதம் மட்டுமே இத்தொழில் நடக்கும்.
கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பு இருந்ததை காட்டிலும், மின் கட்டணம் தற்போது பத்து மடங்கு உயர்ந்துள்ளது.
வருவாயின் பெரும்பகுதி மின் கட்டணத்துக்கே செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. மேலும், மூலப் பொருட்களான கிழங்கு மாவு, சவுக்கு குச்சி, சிமெண்டு சாக்கு உள்ளிட்டவையும் பல மடங்கு விலை அதிகரித்துள்ளன. ஆள் கூலியும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதால், தொழில் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஆறு மாதங்கள் மட்டுமே நடக்கும் இத்தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நிலையில், இக்காலகட்டத்தில் மட்டும் மின் கட்டணத்துக்கு மானியம் வழங்கி தமிழக அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.