/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொட்டு பார்த்தால் காகிதம்: தொடர்ந்து படித்தால் ஆயுதம்!
/
தொட்டு பார்த்தால் காகிதம்: தொடர்ந்து படித்தால் ஆயுதம்!
தொட்டு பார்த்தால் காகிதம்: தொடர்ந்து படித்தால் ஆயுதம்!
தொட்டு பார்த்தால் காகிதம்: தொடர்ந்து படித்தால் ஆயுதம்!
ADDED : ஜூலை 28, 2024 12:36 AM

'புத்தக வாசிப்பு வாயிலாக அந்தஸ்து பெற முடியும்' என, அப்துல் கலாம் நினைவு நாளில் தெரிவிக்கப்பட்டது.திருப்பூர், காந்திநகர், ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் டயானா, வரவேற்றார்.
அப்துல் கலாம் குறித்து, மாணவி பூஜா ஸ்ரீ பேசினார். ஏ.வி.பி., டிரஸ்ட் கல்விக்குழும தலைவர் கார்த்திகேயன், தலைமை வகித்தார். தொடர்ந்து, ஏ.வி.பி., டிரஸ்ட் கல்விக்குழுமம் சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்புக்கு, 5.91 லட்சம் ரூபாய் நன்கொடைக்கான காசோலை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டி.ஆர்.டி.எஸ்.,) மூத்த விஞ்ஞானி டில்லிபாபு,'' புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும். தொட்டு பார்த்தால் வெறும் காகிதம் தான்; தொடர்ந்து படித்தால், அதுதுான் ஆயுதம். அப்துல் கலாமின் அக்னி சிறகுகள் புத்தகத்தை படித்த பிறகு தான் எனக்கு ராணுவ விஞ்ஞானியாக மாற வேண்டும் என்ற உத்வேகம் வந்தது. நமது மூளை பிறரின் வலியை போக்குவதாக இருக்க வேண்டும் அப்துல் கலாமின் அறிவுரையை மனதில் கொள்ள வேண்டும்,'' என்றார்.முடிவில், பள்ளி ஒருங்கிணைப்பாளர் வித்யாரிஸ்வான், நன்றி கூறினார்.
-------------
திருப்பூரில், காந்தி நகர், ஏ.வி.பி., பள்ளியில் நடந்த அப்துல் கலாம் நினைவு தின கருத்தரங்கில், 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்புக்கு, ஏ.வி.பி., கல்வி குழுமம் சார்பில், 5.90 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.