/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வடமாநில தொழிலாளர் விவரம் பதிவேடு பராமரிக்க வலியுறுத்தல்
/
வடமாநில தொழிலாளர் விவரம் பதிவேடு பராமரிக்க வலியுறுத்தல்
வடமாநில தொழிலாளர் விவரம் பதிவேடு பராமரிக்க வலியுறுத்தல்
வடமாநில தொழிலாளர் விவரம் பதிவேடு பராமரிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 22, 2024 12:45 AM
திருப்பூர்;ஏ,ஐ.டி.யு.சி., சார்பில், திருப்பூர் தொழில்துறை பங்களிப்போர் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவனிடம் அளிக்கப்பட்ட மனு:
தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள், அலுவலர்கள் அடங்கிய பணியாளர் குழுவை அமைக்க வேண்டும். திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்களின் முழு விவரங்களையும் திரட்டி, அனைத்து விவரங்களையும் மாவட்ட நிர்வாகம், பதிவேடாக பராமரிக்க வேண்டும். ரயில்வே ஸ்டேஷனில் தனி அலுவலகம் அமைத்து விவரங்களை சேகரிக்க திட்டமிட வேண்டும்.
தொழிலாளர்களுக்கு வழங்கும் அளவு சம்பளம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
தொழிலாளர்களை கவுரவப்படுத்தும் வகையில் விழாக்கள் கொண்டாட வேண்டும். ஆயுதபூஜை நாளில், பூஜை என்று நின்றுவிடாமல் தொழிலாளரை கவுரவிக்கும் விழாவாக கொண்டாட வேண்டும்.
தொழில் வளர்ச்சி, தொழில் பாதுகாப்பு மிக முக்கியமானது; அதேநேரம், தொழிலாளர் பாதுகாப்பும் மிக முக்கியம். தொழிலாளர்கள் குடும்ப உதவி, குழந்தைகளின் கல்வி, நல உதவி என, அனைத்து உதவிகளும் கிடைக்க வேண்டும்.