/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நத்தம் நில விவரங்கள் சரிபார்ப்பது அவசியம்
/
நத்தம் நில விவரங்கள் சரிபார்ப்பது அவசியம்
ADDED : ஜூலை 14, 2024 11:09 PM
திருப்பூர்:டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளதால், நத்தம் நில விவரங்களை சரிபார்த்துக்கொள்வது அவசியம்.
திருப்பூர் மாவட்டத்தில், ஊரகம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள நத்தம் நிலத்தில் வசிப்பவர்களுக்கு, கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் பட்டா வழங்கப்பட்டது. தற்போது, நத்தம் தொடர்பான அனைத்து விவரங்களும், வரைபடங்களும் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து, சரிபார்த்து, ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மூலம், ஒவ்வொரு தாலுகா வாரியாக, நத்தம் நிலம் தொடர்பான சேவைகள், ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பதிவேடு விவரங்களை, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்திருப்பதால், பல்வேறு பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நத்தம் நிலத்தின் உரிமையாளர்கள், ஆன்லைன் மூலம், தங்கள் சொத்து விவரங்களை சரிபார்க்கும் வசதியை செய்ய வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
நிலம் தொடர்பான விவரங்களை சரிபார்க்க, 'eservices' என்ற இணையத்தின் வழியே சென்று, 'e-- services og land records' என்ற பிரிவில், தங்கள் மாவட்டம், தாலுகா, வருவாய் கிராமம், தங்கள் சொத்தின் பட்டா எண் அல்லது புல எண்களை குறிப்பிட்டு, விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம் என, வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
*