/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காமராஜர் பிறந்த நாள் பள்ளியில் கொண்டாட்டம்
/
காமராஜர் பிறந்த நாள் பள்ளியில் கொண்டாட்டம்
ADDED : ஜூலை 16, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;திருப்பூர் மாநகராட்சி, 22வது வார்டு கந்தசாமி லே-அவுட்டிலுள்ள துவக்கப்பள்ளியில், முன்னாள் முதல்வர் காமராஜரின், 122வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பி.டி.ஏ., சார்பில், மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
l அவிநாசி போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள துவக்க பள்ளியில், நடந்த விழாவில், பள்ளி உதவி ஆசிரியர் பாக்யலட்சுமி, வட்டார கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, பள்ளி மேலாண்மை குழு தலை வர் முகமது அலி ஜின்னா, முகமது யாசின், அவிநாசி ரோட்டரி அமைப்பாளர் குப்புராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.