/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில தடகள போட்டி; வெற்றியாளருக்கு பாராட்டு
/
மாநில தடகள போட்டி; வெற்றியாளருக்கு பாராட்டு
ADDED : ஜூலை 14, 2024 12:42 AM

திருப்பூர்;மாநில தடகள சங்கம் சார்பில், சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில், 36வது மாநில ஜூனியர் தடகள போட்டி, ஜூலை, 5 முதல் 7ம் தேதி வரை மூன்று நாட்கள் நடந்தது. மாநிலம் முழுதும் இருந்து பல்வேறு போட்டிகளில் வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.
திருப்பூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி, எட்டாம் வகுப்பு மாணவர் இளமுகிலன் 'டிரையத்லான்' (நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் இணைந்த) போட்டியில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார். ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 மாணவி, ராகவர்த்தினி, ஈட்டி எறிதல் போட்டியில், மூன்றாமிடம் பெற்று, வெண்கலம் கைப்பற்றினார். கோவை, பி.எஸ்.ஜி., கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.காம்., படித்து வரும் மாணவர் யாகவராஜ், 100 மீ., ஓட்டத்தில், இரண்டாமிடம் பெற்று, வெள்ளி வென்றார்.
இவர்கள் மூவரும் திருப்பூர் மாவட்டத்துக்கென நியமிக்கப்பட்டுள்ள, மாவட்ட விளையாட்டுத்துறையின் 'கேலோ இந்தியா' பயிற்சியாளர் திலகவதியிடம் பயிற்சி பெற்றவர்கள். மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்று, சாதித்த மாணவ, மாணவியரை மாவட்ட உடற்கல்வி அலுவலர் ரகுகுமார் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர்கள் பாராட்டினர்.