/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசெல்லாண்டியம்மன் குண்டம் திருவிழா
/
ஸ்ரீசெல்லாண்டியம்மன் குண்டம் திருவிழா
ADDED : ஜூலை 14, 2024 12:05 AM
திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீசெல்லாண்டியம்மன் குண்டம் திருவிழா, 30 ம் தேதி நடக்கிறது.
திருப்பூரின் காவல் தெய்வம் என்ற போற்றப்படும் செல்லாண்டியம்மன் கோவிலில், ஆடி மாதம் குண்டம் நடந்து வருகிறது. அதன்படி, 18ம் ஆண்டு குண்டம் திருவிழா, வரும், 17ம் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
வரும், 19ல் பூச்சாட்டு, 22ல் மகாமுனி பொங்கல், 23ம் தேதி சக்தி அழைத்தல், 24ல் பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வருதல், 25 ம் தேதி கோட்டை முனியப்பன் கோவிலில் இருந்து சூலம் எடுத்து வருதல், 28 ல், பூவோடு ஊர்வலம் நடக்கிறது.
வரும் 28 ம் தேதி திருக்கல்யாணம் மற்றும் அன்னதானம், 29ம் தேதி குண்டத்துக்கு அக்னி இடும் நிகழ்ச்சியும், 30ம் தேதி காலை, 5:00 மணிக்கு, குண்டம் திருவிழாவும் நடக்க உள்ளது. தொடர்ந்து, அம்மன் திருவீதியுலா, மஞ்சள் நீராட்டு விழா, மறுபூஜை நடக்க உள்ளது.
விழா ஏற்பாடுகளை, தக்கார் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.