/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
களவு சாத்தியம் அல்ல ... கல்வி யின் சிறப்பு ; பள்ளிக்கூடங்கள் திறக்க ஆயத்தப்பணி தீவிரம்
/
களவு சாத்தியம் அல்ல ... கல்வி யின் சிறப்பு ; பள்ளிக்கூடங்கள் திறக்க ஆயத்தப்பணி தீவிரம்
களவு சாத்தியம் அல்ல ... கல்வி யின் சிறப்பு ; பள்ளிக்கூடங்கள் திறக்க ஆயத்தப்பணி தீவிரம்
களவு சாத்தியம் அல்ல ... கல்வி யின் சிறப்பு ; பள்ளிக்கூடங்கள் திறக்க ஆயத்தப்பணி தீவிரம்
ADDED : ஜூன் 08, 2024 01:03 AM

திருப்பூர்;மணியோசை ஒலிக்கும்; அது பள்ளியில் இருந்து எழும். ஆம்... பள்ளி, கல்விக்கனியைப் பெறுவதற்கான ஆலயம்.
பள்ளிக்கூட மணியொலிக்கும்
பரவசம் மாணவரிடம் எதிரொலிக்கும்
உள்ளம் மகிழ்ந்திருக்கும்
உயர்ந்திடக் காலம் கைகொடுக்கும்
நாளை மறுதினம் (ஜூன் 10ம் தேதி) அரசு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகளில் பராமரிப்பு, துாய்மைப்பணி திடீரென சுறுசுறுப்பாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் காரணமாக, கோடை விடுமுறை ஏப்ரல் மாதமே அறிவிக்கப்பட்டது. வழக்கமாக, 30 முதல், 40 நாட்கள் விடுமுறை விடப்படும். இம்முறை தேர்வுகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டு, 60 நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து, 2024 - 2025ம் கல்வியாண்டுக்காக பள்ளிகள், வரும், 10ம் தேதி திறக்கப்பட உள்ளது.
துாய்மை, பராமரிப்பு பணிகள்
பள்ளிகள் திறப்பு உறுதியாகியுள்ள நிலையில், மாநகராட்சி, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், சில பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளிக்கு முன்வந்து உதவிகள் செய்யும் நல்லுள்ளங்கள் மூலம் துாய்மை மற்றும் பராமரிப்பு பணி துவங்கி, நடந்து வருகிறது.
நேற்று பள்ளி வளாகம், நுழைவு வாயில், மைதானம், சமையலறை, விடுதி, மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் குடிநீர் தொட்டி சுற்றுப்புறங்கள் துாய்மைப்படுத்தப்பட்டன.
மரங்களில் இருந்து விழுந்திருந்த இலை, சருகுகள், பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டன. இன்றும், நாளையும் வகுப்பறை, நுாலகம், மாணவ, மாணவியருக்கான உணவுக்கூடம், இறைவணக்க கூட்டம் நடக்குமிடங்கள் உள்ளிட்டவை துாய்மைப்படுத்தப்படுகிறது.
கோடை விடுமுறை காரணமாக இதுவரை பள்ளிகளுக்கான குடிநீர் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று மாநகராட்சிகள் லாரிகள் மூலம் பள்ளி குடிநீர் தொட்டிகளில் நிரப்பப்படுகிறது.