/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டு முழுவதும் முருங்கை சாகுபடி; விவசாயிகளுக்கு வருமானம் கொட்டும்
/
ஆண்டு முழுவதும் முருங்கை சாகுபடி; விவசாயிகளுக்கு வருமானம் கொட்டும்
ஆண்டு முழுவதும் முருங்கை சாகுபடி; விவசாயிகளுக்கு வருமானம் கொட்டும்
ஆண்டு முழுவதும் முருங்கை சாகுபடி; விவசாயிகளுக்கு வருமானம் கொட்டும்
ADDED : ஜூலை 28, 2024 12:29 AM
பொங்கலுார்;முருங்கை இல்லா சாம்பார் ருசிக்காது. ஒவ்வொரு வீட்டிலும் முருங்கையை பயன்படுத்துகின்றனர். முருங்கை சீசன் காலத்தில் மட்டுமே சந்தையில் குவிந்து கிடக்கிறது.
சீசன் முடிந்ததும் ஒரு காய் பத்து ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதனால் பொதுமக்கள் முருங்கை காய்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
முருங்கை பூக்கும் சமயத்தில் மழை பெய்தால் பூக்கள் நிற்காது. மழைக்காலம் துவங்கிய இரண்டொரு மாதங்களில் முருங்கைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். ஆனால் முருங்கையை வருடம் முழுவதும் காய்க்க வைத்தால் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் விற்பனை செய்து நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.
தற்போதெல்லாம் பசுமை குடில், பாலி ஹவுஸ் என்று விவசாயம் நவீன முறைக்கு மாறி வருகிறது. முருங்கைக்கு வெயில் பட வேண்டும். மழைத்துளி படக்கூடாது. இதற்கு பாலி ஹவுஸ் சிறந்த தீர்வாக இருக்கும். இதில் மழைக்காலத்திலும் முருங்கைக் காய்களை விளைவிக்க முடியும்.
ஒரு ஏக்கர் முருங்கை சாகுபடி செய்வதை விட ஐந்து சென்டில் பாலி ஹவுஸ் அமைத்து முருங்கை சாகுபடி செய்தால் ஒரு ஏக்கரில் வரும் வருமானத்திற்கு இணையான வருமானம் கிடைக்கும்.
விவசாயிகள் நவீன முறைக்கு மாற நிதி பெரும் தடையாக உள்ளது. புதிதாக நிலம் வாங்கி விவசாயம் செய்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். விவசாய நிலங்கள் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏக்கர், 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை விலை போகிறது.
அதிக விலை கொடுத்து நிலம் வாங்கி விவசாயம் செய்பவர்கள் இது போன்ற புதுமையான முயற்சிகளில் ஈடுபட்டால் நல்ல வருமானம் பார்க்க முடியும்.