/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதியில் நிற்கும் நிழற்கூரை பணி சடையப்பன் கோவில் முன் அவலம்
/
பாதியில் நிற்கும் நிழற்கூரை பணி சடையப்பன் கோவில் முன் அவலம்
பாதியில் நிற்கும் நிழற்கூரை பணி சடையப்பன் கோவில் முன் அவலம்
பாதியில் நிற்கும் நிழற்கூரை பணி சடையப்பன் கோவில் முன் அவலம்
ADDED : ஜூலை 14, 2024 12:55 AM

திருப்பூர்:சடையப்பன் கோவில் முன்புறம் நிழற்கூரை அமைக்கும் பணி கிடப் பில் போட்டுக் கிடக்கிறது. இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருப்பூர், வாலிபாளையம் பகுதியில் யூனியன் மில் ரோடு பகுதியை ஒட்டி சடையப்பன் கோவில் உள்ளது. சுற்றுப்பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கோவில் முன்புறம் பெரிய அளவிலான நிழற்கூரை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.இப்பணி தடபுடலாக பூமி பூஜையுடன் துவங்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகிறது.
பணி துவங்கும் விதமாக நிழற்கூரை அமைக்கும் வகையில் ரோட்டில் தரைமட்டத்தில் கான்கிரீட் பில்லர் கட்டி அதில் இரும்பு ஆங்கிள் அமைக்கப்பட்டது.அதன் பின் மேற்கொண்டு பணி தொடராமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டுக் கிடக்கிறது. ரோட்டில் வெறுமென இரும்பு ஆங்கிள்கள் மட்டும் ஆங்காங்கே வீணாகக் கிடக்கிறது.
இதனால், வாகன ஓட்டிகளுக்கு சிரமம் நிலவுகிறது. பக்தர்கள் வசதிக்காக அமைக்க திட்டமிடப்பட்ட நிழற்கூரை பணி முழுமையாக செய்து முடிக்கப்படாமல் துவக்க நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டது பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.