/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முடிவுக்கு வந்த வக்கீல்கள் போராட்டம்
/
முடிவுக்கு வந்த வக்கீல்கள் போராட்டம்
ADDED : ஜூலை 14, 2024 12:56 AM
திருப்பூர்;சட்ட திருத்தம் தொடர்பாக கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்திய வக்கீல்கள், தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றனர். நாளை முதல் வழக்கம் போல் கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்கவுள்ளனர்.
மத்திய அரசு கடந்த 1ம் தேதி முதல் அமல்படுத்திய குற்றச் சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். கடந்த இரு வாரங்களாக கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்காமல் புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த புறக்கணிப்பு போராட்டம் காரணமாக அனைத்து கோர்ட்களிலும் வழக்கு விசாரணையில் பெரும் தேக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், இத்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முன்னாள் நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்படுவதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து, வக்கீல்கள் தங்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். அதனடிப்படையில் நாளை 15ம் தேதி முதல் வக்கீல்கள் வழக்கம் போல் பணிக்குத் திரும்பவுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் பார் அசோசியேசன், அட்வகேட்ஸ் அசோசியேசன் மற்றும் திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் நாளை முதல் கோர்ட் நடவடிக்கைகளில் பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சங்கங்களின் நிர்வாகிகள் நேற்று நடத்திய ஆலோசனைகளை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.