/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரிங் ரோட்டில் பல்லாங்குழி வாகன ஓட்டிகள் பெரும்பாடு
/
ரிங் ரோட்டில் பல்லாங்குழி வாகன ஓட்டிகள் பெரும்பாடு
ரிங் ரோட்டில் பல்லாங்குழி வாகன ஓட்டிகள் பெரும்பாடு
ரிங் ரோட்டில் பல்லாங்குழி வாகன ஓட்டிகள் பெரும்பாடு
ADDED : ஜூலை 09, 2024 10:42 PM

அனுப்பர்பாளையம்;திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு சிறு பூலுவப்பட்டி ரிங் ரோடு பகுதியில் அதிகளவில் வீடுகள், பனியன் நிறுவனங்கள் உள்ளன. தற்போது காஸ் குழாய் பதிக்க தனியார் நிறுவனம் சார்பில், ரோட்டில் குழி தோண்டப்பட்டு வருகிறது. இந்த குழியில் வாகனங்கள் சிக்கி கொள்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
வார்டு கவுன்சிலர் தங்கராஜ் கூறியதாவது:
குழி தோண்டினால் பணி முடிந்ததும் முறையாக மூடுவதில்லை. இதனால், ரோட்டில் பல இடங்களில் குழியாக உள்ளது. நேற்று முன் தினம் குழி தோண்டியபோது, குடிநீர் குழாய் உடைந்தது. குடிநீர் வினியோகமும் பாதிக்கப்படுகிறது.
அந்த குழியில் கார் ஒன்று சிக்கி கொண்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி முறையிட்டாலும் அவர்களும் கண்டு கொள்வதில்லை.இந்நிலை நீடித்தால் மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
---
பல்லாங்குழி ரோட்டில், மாட்டிக் கொண்ட கார்.