/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளி வீடு சீரமைப்பு ரூ.ஒரு லட்சம் அளித்த ஆசிரியர்
/
தொழிலாளி வீடு சீரமைப்பு ரூ.ஒரு லட்சம் அளித்த ஆசிரியர்
தொழிலாளி வீடு சீரமைப்பு ரூ.ஒரு லட்சம் அளித்த ஆசிரியர்
தொழிலாளி வீடு சீரமைப்பு ரூ.ஒரு லட்சம் அளித்த ஆசிரியர்
ADDED : ஜூலை 14, 2024 12:58 AM

அவிநாசி:திருமுருகன்பூண்டி நகராட்சி, ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வருபவர் ரங்கசாமி, 81. முடி திருத்தும் தொழிலாளியான இவரது வீடு சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இதையறிந்த தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சதீஷ்குமார் என்பவர், ஒரு லட்சம் ரூபாயை, நேற்று அப்பகுதிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்ற நீலகிரிஎம்.பி., ராஜாவிடம் அளித்து ரங்கசாமிக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, பூண்டி நகரச் செயலாளர் கிருஷ்ணசாமி, நகராட்சி தலைவர் குமார், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.