/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமியிடம் அத்துமீறல்: 2 சிறுவர் உட்பட மூவர் கைது
/
சிறுமியிடம் அத்துமீறல்: 2 சிறுவர் உட்பட மூவர் கைது
சிறுமியிடம் அத்துமீறல்: 2 சிறுவர் உட்பட மூவர் கைது
சிறுமியிடம் அத்துமீறல்: 2 சிறுவர் உட்பட மூவர் கைது
ADDED : ஜூலை 14, 2024 12:36 AM
திருப்பூர்:திருப்பூரில், 14 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய, 2 சிறுவர்கள் மற்றும் ஒரு சலவை தொழிலாளி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் பகுதியைச் சேர்ந்த, 14 வயது சிறுமி ஒருவர், 10ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அதில், அவர் பாலியல் அத்துமீறலில் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து தெற்கு மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில், தாராபுரத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் இதில் ஈடுபட்டது தெரிந்தது.
சிறுமி வசிக்கும் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த போது, அச்சிறுவர்கள் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்து மீறியதும், அதேபகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி முகமது தாலித், 55, என்பவரும் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்ததும் தெரிந்தது.
இதனால், 'போக்சோ' பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார், 2 சிறுவர் உட்பட மூன்று பேரையும் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், சிறையில் அடைத்தனர்.