/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிக்னல் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறு
/
சிக்னல் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறு
ADDED : ஜூலை 16, 2024 01:44 AM

அனுப்பர்பாளையம்;திருப்பூர், பி.என் ரோடு, போயம்பாளையம் நால் ரோடு சந்திப்பில் சிக்னல் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு அவ்வப்போது விபத்தும் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:
திருப்பூர், போயம்பாளையத்தில் அதிகளவில் வீடுகள் மற்றும் பனியன் நிறுவனங்கள் உள்ளன. தொழில் ரீதியாக சரக்கு வாகனம் மற்றும் வேலைக்கு செல்வோர் என அதிகப்படியான போக்குவரத்து நிறைந்த பகுதி. போயம்பாளையம் நால்ரோடு சந்திப்பு பகுதியில் முன்பு மாநகர போலீசார் சார்பில், சிக்னல் பொருத்தப்பட்டிருந்தது.
சிக்னல் இருந்ததால், வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியின்றி சென்று வந்தன. தற்போது, பொருத்தப்பட்டிருந்த சிக்னல் அகற்றப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் முறையின்றி தாறுமாறாக செல்கின்றன. போக்குவரத்து போலீசாரும் இருப்பதில்லை. கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு அவ்வப்போது விபத்துகளும் நடந்து வருகிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோரால், கடுமையாக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்க வேண்டி உள்ளது. எனவே, நால்ரோடு சந்திப்பில் சிக்னல் அமைக்க வேண்டும். இல்லாவிடில், போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.