/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மீண்டும் முளைக்கும் ஆக்கிரமிப்பு துாக்கத்தில் இருந்து அதிகாரிகள் விழிப்பார்களா?

ADDED : ஜூன் 20, 2024 05:39 AM

திருப்பூர், ; குள்ளி செட்டியார் வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய சில நாட்களிலேயே மீண்டும் கட்சி கொடிகளுடன் ஆக்கிரமிப்பு முளைக்கத் துவங்கியுள்ளது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் உட்பட சுற்றுப்பகுதிகளான, புது மார்க்கெட் வீதி, குள்ளி செட்டியார் வீதி, சிக்கண்ண செட்டியார் வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி, துளசி ராவ் வீதி உள்ளிட்ட சில முக்கிய வீதிகளில், எப்போதும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம்.
அதிகாலை முதல் நள்ளிரவு வரையும் பரபரப்பாக இப்பகுதிகள் காணப்படும். பெரும்பாலான வீதிகளில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகளவில் காணப்பட்டது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல், வாகன நெருக்கடி மற்றும் பாதசாரிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டது.
இதனால், சுற்றுப்பகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், குள்ளி செட்டியார் வீதியில், தி.மு.க., கட்சிக்கொடி கட்டி, தகர ெஷட் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அப்பகுதியில் கம்யூ.,கட்சியினர் தொழிற்சங்க கொடிகள் கட்டி, ெஷட் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில், தி.மு.க., வினர் ஒரு ெஷட் அமைத்துள்ளனர். அடுத்து, இன்னும் சில கட்சியினரும் ஆக்கிரமிப்பு செய்வர். எனவே, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.