நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:ஊதியூர், காசிலிங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பாலன், 58.
தொழிலாளி. வரும், 6ம் தேதி மகளுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில், அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு குள்ளம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, ரோட்டோரம் பழுதாகி நின்றிருந்த வேன் மீது, டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. காயமடைந்த தம்பதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த பாலன் நேற்று அதிகாலை இறந்தார். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.