/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளைச்சல் கடும் பாதிப்பு: மக்காச்சோளம் விலை உயர்வு
/
விளைச்சல் கடும் பாதிப்பு: மக்காச்சோளம் விலை உயர்வு
விளைச்சல் கடும் பாதிப்பு: மக்காச்சோளம் விலை உயர்வு
விளைச்சல் கடும் பாதிப்பு: மக்காச்சோளம் விலை உயர்வு
ADDED : ஜூன் 01, 2024 11:19 PM
பொங்கலுார்;கோழி மற்றும் மாட்டு தீவனங்களுக்கு முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் திகழ்கிறது.
கடந்தாண்டு புரட்டாசி பட்டத்தில் சாகுபடி செய்த மக்காச்சோளம் மாசி, பங்குனி மாதங்களில் அறுவடைக்கு வந்தது. அறுவடை சமயத்தில் கிலோ, 23 ரூபாயாக இருந்தது.
கடந்த ஆறு மாதங்களாக போதிய மழை பெய்யவில்லை. கடும் வறட்சி காரணமாக புல்வெளிகள் காய்ந்தன. வறட்சியைச் சமாளிக்க விவசாயிகள் அதிக அளவு அடர் தீவனங்களை வாங்க துவங்கினர். மக்காச்சோளம் சாகுபடி பரப்பு குறைந்ததாலும், தேவை அதிகரித்ததாலும் ஒரு கிலோ மக்காச்சோளம் கொள்முதல் விலை, 25 ரூபாயாக அதிகரித்துள்ளது. மக்காச்சோளம் கொள்முதல் விலை உயர்வால் கோழி பண்ணை மற்றும் கால்நடை விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.