ADDED : ஜூலை 28, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் பி.என்., ரோட்டை சேர்ந்த, 15 வயது சிறுமி. இவரிடம், அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், 22 என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி, குழந்தை திருமணம் செய்தார். தற்போது, சிறுமி, இரு மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த குழந்தைகள் உதவி குழுவுக்கு தகவல் தெரிந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் வாலிபரை 'போக்சோ'வில் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.