sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பூர் மண்டலத்தில் 15 புதிய பஸ்கள் இயக்கம் 97ல் 78 பஸ்கள் 'ஓகே'

/

திருப்பூர் மண்டலத்தில் 15 புதிய பஸ்கள் இயக்கம் 97ல் 78 பஸ்கள் 'ஓகே'

திருப்பூர் மண்டலத்தில் 15 புதிய பஸ்கள் இயக்கம் 97ல் 78 பஸ்கள் 'ஓகே'

திருப்பூர் மண்டலத்தில் 15 புதிய பஸ்கள் இயக்கம் 97ல் 78 பஸ்கள் 'ஓகே'


ADDED : ஜூன் 08, 2025 04:43 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, அரசு போக்குவரத்து கழகம், திருப்பூர் மண்டலத்திலிருந்து, 15 புதிய பஸ்கள் வழித்தடங்களில் இயக்கும் விழா, உடுமலையில் நேற்று நடந்தது. அமைச்சர்கள், அதிகாரிகள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

தமிழக அரசு சார்பில், அரசு போக்குவரத்து கழகம் திருப்பூர் மண்டலத்துக்கு, 2021 - 25 வரை, 47 புறநகர் பஸ்கள், 50 டவுன் பஸ்கள் என, 97 அரசு பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 45 புறநகர் பஸ்களும், 18 டவுன் பஸ்கள் என, 63 பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்காக வழித்தடத்தில் இயக்கப்பட்டுள்ளது.

மேலும், 15 புதிய பஸ்கள் வழித்தடத்தில் இயக்குவதற்கான துவக்க விழா, நேற்று உடுமலை பஸ் ஸ்டாண்டில் நடந்தது. இதில், திருப்பூர்-2 கிளை சார்பில், திருப்பூர் - வேளாங்கண்ணி வரை, இரு புறநகர் பஸ்களும், தாராபுரம் கிளையிலிருந்து, வெள்ளைகவுண்டன் வலசு, கணியூர், மடத்துக்குளம் வழித்தடங்களிலும், காங்கயம் கிளையிலிருந்து சென்னிமலை, திருப்பூருக்கும், பல்லடம் கிளையிலிருந்து பெருமாநல்லுார், திருப்பூருக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

உடுமலை கிளையிலிருந்து, கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவில், கடத்துார், கல்லாபுரம், அமராவதி நகர் ஆகிய வழித்தடங்களிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஒதுக்கீடு செய்யப்பட்ட பஸ்களில், 19 டவுன் பஸ்களில் கூண்டு கட்டுமான பணிகள் நடப்பதாகவும், விரைவில் வழித்தடங்களில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய பஸ்களை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, எம்.பி.,ஈஸ்வரசாமி, அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் சுப்ரமணியம், கோட்டாட்சியர் குமார், திருப்பூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் பத்மநாபன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

முன்னதாக, உடுமலை நாராயணகவி மணிமண்டப வளாகத்தில், ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, போட்டி தேர்வர்கள் பயன்பெறும் வகையில், படிப்பகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர்.






      Dinamalar
      Follow us