/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துணைத்தேர்வுக்கு 3,021 பேர் விண்ணப்பம்
/
துணைத்தேர்வுக்கு 3,021 பேர் விண்ணப்பம்
ADDED : ஜூன் 10, 2025 11:17 PM
திருப்பூர்:
மே, 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது; மாவட்டத்தில் தேர்வெழுதிய, 25,597 மாணவ, மாணவியரில், 385 மாணவர், 248 மாணவிகள் என, 603 பேர் தேர்ச்சி பெறவில்லை. துணைத் தேர்வெழுத, 547 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு, மே, 16ம் தேதி வெளியாகியது; இதில், பத்தாம் வகுப்பில், 1,520 பேர், பிளஸ் 1 தேர்வில், 1,442 பேர் தேர்ச்சி பெறவில்லை.
துணைத் தேர்வுக்கு, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு, 1,379 பேர்; பிளஸ் 1ல், 1,095 பேர் என, மொத்தம், 3,021 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பிளஸ் 2 துணைத்தேர்வு, வரும், 25ம் தேதியும், பிளஸ் 1 துணைத் தேர்வு ஜூலை, 4ம் தேதியும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு, ஜூலை, 2ம் தேதியும் துவங்குகிறது. 'துணைத் தேர்வை எளிமையாக எதிர்கொள்ள, விண்ணப்பித்த மாணவ, மாணவியர், இப்போதிருந்தே தேர்வுக்கு தயாராக வேண்டும்,' என, தேர்வுகள் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.