/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
4 துணை தாசில்தாருக்கு தற்காலிக பதவி உயர்வு
/
4 துணை தாசில்தாருக்கு தற்காலிக பதவி உயர்வு
ADDED : ஜன 26, 2024 11:31 PM
உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில், நான்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு, துணை தாசில்தாராக தற்காலிக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், ஊத்துக்குளி தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜெனிட்டா, திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலக துணை தாசில்தாராகவும் (மகளிர் உரிமை திட்டம்); மண்டல துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, தாராபுரம் ஆர்.டி.ஓ, அலுவலகத்தில் மகளிர் உரிமை திட்ட துணை தாசில்தாராகவும்; மண்டல துணை தாசில்தார் சந்திரசேகர், உடுமலை ஆர்.டி.ஓ., அலுவலக மகளிர் உரிமை திட்ட துணைதாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணை தாசில்தார்கள், பணியிட மாறுதல் மற்றும் தற்காலிக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பணியிடத்தில் உடனடியாக இணையவேண்டும். இப்பதவி உயர்வு, முற்றிலும் தற்காலிகமானது; பதவி உயர்வு மீது எவ்வித உரிமையும்கோர முடியாது. மீண்டும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலைக்கு பதவியிறக்கம் செய்யப்படும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

