/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாழ்பட்டு கிடக்கும் பசுமைப்பூங்கா
/
பாழ்பட்டு கிடக்கும் பசுமைப்பூங்கா
ADDED : ஜூன் 07, 2025 12:50 AM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 4வது வார்டு, நெருப்பெரிச்சல் ஜி.என்., கார்டனில் மாநகராட்சி சார்பில், பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவில், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, இருக் கைகள், சிறுவர்கள் விளையாட விளையாட்டு சாதனங்கள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, மின் விளக்கு, பொதுமக்கள் அமர புல் தரை, செயற்கை நீரூற்று உள்ளிட்ட அனைத்து வசதிகள் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது, பூங்கா பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பூங்கா முழுவதும் புல் தரை காய்ந்து புதர் மண்டி உள்ளது. இருக்கைகள் அனைத்தும் உடைந்து போய் உள்ளன. கழிப்பறை கதவு உடைந்து கிடக்கிறது. விளையாட்டு சாதனங்கள் விளையாட முடியாத நிலையில் உடைந்து காணப்படுகின்றன. மின் விளக்கு உடைந்து கம்பம் மட்டுமே காட்சியளிக்கிறது.
பொதுமக்கள் கூறியதாவது:
அனைத்து வசதிகளுடன் நல்ல முறையில் பூங்கா அமைக்கப்பட்டது. பயன்படுத்தி வந்தோம். அதிகாரிகள் கண்டு கொள்ளா போக்கால், இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்பகுதியில், பொது மக்கள் பொழுதுபோக்கிற்கு பூங்கா மட்டுமே உள்ளது. பூங்காவை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.