/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் பின்னலாடைக்கு தனி அரங்கு; ஏ.இ.பி.சி., வலியுறுத்தல்
/
திருப்பூர் பின்னலாடைக்கு தனி அரங்கு; ஏ.இ.பி.சி., வலியுறுத்தல்
திருப்பூர் பின்னலாடைக்கு தனி அரங்கு; ஏ.இ.பி.சி., வலியுறுத்தல்
திருப்பூர் பின்னலாடைக்கு தனி அரங்கு; ஏ.இ.பி.சி., வலியுறுத்தல்
ADDED : ஜன 26, 2024 11:56 PM
திருப்பூர்: 'பாரத் டெக்ஸ் -2024' கண்காட்சியில், திருப்பூர் பின்னலாடைக்கு பிரத்யேக அரங்கு அமைக்க வேண்டுமென,ஏ.இ.பி.சி., வலியுறுத்தியுள்ளது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், அனைத்து வகை ஏற்றுமதி கவுன்சில்களுடன் இணைந்து, 'பாரத் டெக்ஸ் -2024' என்ற ஜவுளி கண்காட்சியை நடத்துகிறது. டில்லி வர்த்தக மையத்தில்,வரும் பிப்., 26ல் துவங்கி நான்கு நாட்களுக்கு, மாபெரும் கண்காட்சி நடக்க உள்ளது.
இந்திய ஜவுளி ஏற்றுமதி மற்றும் நமது நாட்டின் திறமையை வெளிப்படுத்தும் வகையில், இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளில், ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற கண்காட்சி நடத்தப்படுகிறது; நமது நாட்டில் இதுபோன்ற கண்காட்சி இல்லையே என்ற ஏக்கம் இதன்மூலம் தீர்ககப்பட்டுள்ளது.
'பாரத் டெக்ஸ் -2024' கண்காட்சி வாயிலாக, நமது ஏற்றுமதியாளர்கள் வெளிப்படுத்துவர் என்பதில் ஐயமில்லை. பஞ்சு பதப்படுத்துவதில் துவங்கி, நுால் உற்பத்தி, துணி உற்பத்தி, நேர்த்தியான ஆடைவடிவமைப்பு, மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தி, வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி, 'டெக்னிக்கல் டெக்ஸ்டைல்' உற்பத்தி போன்ற ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலியும் இடம்பெற உள்ளது.
விழிப்புணர்வுகருத்தரங்கு
இந்தியாவின் சாதனைகளை, உலக நாடுகளுக்கு உணர்த்தும் வகையில், 'பாரத் டெக்ஸ்' கண்காட்சி அமையும். கண்காட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) சார்பில், முன்கள விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தி வருகிறது.
வெளிநாட்டு வர்த்தகர்களை ஈர்க்கும் வகையில், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், துபாய் போன்ற நாடுகளிலும், கருத்தரங்கு நடத்தப்பட்டது. கண்காட்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், வெளிநாட்டில் உள்ள நமது துாதரகங்களும் முயற்சி எடுத்துள்ளன.
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், திருப்பூரின் பங்களிப்பு மட்டும், 55 சதவீதம்; பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், நிலையான உற்பத்தி நீண்டகால வளர்ச்சி இலக்குடன் செயல்படுகின்றனர்.
திருப்பூரின் பெருமைகளை உணர்ந்து, கண்காட்சி வளாகத்தில், திருப்பூர் பின்னலாடைக்கு பிரத்யேக அரங்கு அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
பயன்பெற வேண்டும்...
இந்திய ஜவுளி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையும், 'பாரத் டெக்ஸ் -2024' கண்காட்சியில், பல்வேறு நாட்டு வர்த்தகர்கள் பங்கேற்கின்றனர். பின்னலாடை உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில், திருப்பூர் முதலிடத்தில் இருக்கிறது. கண்காட்சி வளாகத்தில், 'திருப்பூர் நிட்வேர்' என்ற பிரத்யேக அரங்கை உருவாக்கி, முன்னுரிமை அளிக்க வேண்டும். திருப்பூரில் இருந்து மட்டும், 55 ஏற்றுமதி நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன. ஏற்றுமதியாளர்கள்,ஏ.இ.பி.சி., உறுப்பினர்கள், பாரத் டெக்ஸ் கண்காட்சியில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
- சக்திவேல்,
ஏ.இ.பி.சி., தென்னிந்திய பொறுப்பாளர்

