/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விடுமுறை விடாததால் நடவடிக்கை 'பாய்ந்தது'
/
விடுமுறை விடாததால் நடவடிக்கை 'பாய்ந்தது'
ADDED : ஜன 26, 2024 11:50 PM
திருப்பூர்: விடுமுறை அளிக்காத, கடைகள் மற்றும் ஓட்டல்கள் என, 49 பேர் மீது, தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய விடுமுறை தினத்தில், தொழிலாளரை பணிக்கு அமர்த்தினால், இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்; சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும்.
இதுதொடர்பான, தொழிலாளர் துறையினர் நேற்று மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தினர். தொழிலாளர் பணியாற்றுவது குறித்துமுன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
நேற்றைய ஆய்வில், 41 கடைகள், 24 ஓட்டல்கள் என, 65 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது; அவற்றில், விதிமுறைகளுக்கு முரணாக இருந்த 49 பேர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர்துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

