/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரின் சிறப்பு; நடிகர் சூரி பெருமிதம்
/
திருப்பூரின் சிறப்பு; நடிகர் சூரி பெருமிதம்
ADDED : மே 12, 2025 03:56 AM

திருப்பூர்; திருப்பூர் நிப்ட் டீ கல்லுாரி வளாகத்தில், நடிகர் சூரி நடித்த 'மாமன்' படத்தின் பிரி புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நடிகர் சூரி பேசியதாவது:
எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அங்குள்ள மொழியைப் பேச முடியும். பிற மாநிலத்தவர் ெசன்றால் அங்கு அந்த மொழியைக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால், தமிழகம் வந்து விட்டால் போதும், எல்லா மொழிகளும் கற்றுக் கொள்ளலாம். அவ்வளவு மொழி பேசுவோரும் இங்குள்ளனர்.
அவர்களால் எளிதில் நாம் அந்த மொழியை கற்றுக் கொள்ளவும் முடிகிறது. அவர்களும் தமிழை கற்றுக் கொள்கின்றனர்.தொழிலாளர்களால் உயர்ந்த ஊர் என்று சொன்னால் அது திருப்பூர் தான்.
இங்கு தான் நேற்று தொழிலாளியாக இருந்த ஒருவர் இன்று முதலாளி ஆக மாறியுள்ளார். இந்திய அளவில் ஏற்றுமதி தொழிலில் தமிழகம் ஏற்றம் அடைய, திருப்பூர் ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
உலக நாடுகளில் உள்ள பலரும் இந்த ஊரில் தயாரித்த உடைகளை அணிந்து கொள்கின்றனர் என்பதே பெருமை தான். எனது வளர்ச்சியிலும் இந்த திருப்பூர் உள்ளதை நான் மறுக்க முடியாது. இங்கு தான் எனது வாழ்க்கை துவங்கியது. இங்கிருந்து தான் நான் பல இடங்கள் சென்று இன்று ஒரு இடம் பிடித்துள்ளேன். இங்கு எனது படத்தின் 'பிரி' ரிலீஸ் விழா நடக்கிறது என்றால், இதற்கு மேல் வேறு எந்த பெருமையும் கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பட இயக்குநர் ரவிகுமார், திருப்பூர் சக்தி பிலிம்ஸ் சுப்ரமணியம், கல்லுாரி முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம், கல்லுாரி தலைவர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

