/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராஜஸ்தான் ரயிலில் கூடுதல் ஏ.சி., பெட்டி
/
ராஜஸ்தான் ரயிலில் கூடுதல் ஏ.சி., பெட்டி
ADDED : ஜூன் 13, 2025 11:29 PM
திருப்பூர்; வியாழன்தோறும் கோவையில் இருந்து, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம், பகத் கீ கோதி-க்கு சிறப்பு ரயில் (எண்:06181) இயக்கப்படுகிறது.
வியாழக்கிழமை அதிகாலை புறப்படும் ரயில், சனிக்கிழமை ராஜஸ்தான் செல்லும்; மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தானில் புறப்பட்டு, புதன் காலை கோவை வந்தடைகிறது.
சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதிக்கு வடமாநிலத்தவர் பலர் தமிழகத்தில், மேற்கு மண்டலத்தில் இருந்து பயணிக்கின்றனர்; இதுவரை இந்த ரயிலின் இயக்கம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து அதிகரிப்பதால், ஏ.சி., பெட்டிகளின் எண்ணிக்கையை, நான்கில் இருந்து ஆறாக உயர்த்த தெற்கு ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது. நான்கு பொது பெட்டி, இரண்டு படுக்கை வசதி பெட்டி உட்பட, 18 பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.