
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியரசு தின விழாவில், போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபிநபு, தனது மனைவி மற்றும் மகளுடன் பங்கேற்றார்.
கலை நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவியர் நடனமாடினர். தேச பற்று பாடல்கள் ஒலித்தபோது, மேடையில் அமர்ந்திருந்த கமிஷனரின் மகள், எழுந்து நின்று, கையில் தேசியக்கொடியை ஏந்தியவாறு, உணர்வுப்பூர்வமாக நடனமாடினார். அருகிலிருந்த கலெக்டர் உள்பட அதிகாரிகள் அனைவரும், சிறுமியின் நடனத்தை பார்த்து, பாராட்டினர்.

