/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் பறக்காத பட்டம்... சிறக்கின்ற திட்டம்!
/
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் பறக்காத பட்டம்... சிறக்கின்ற திட்டம்!
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் பறக்காத பட்டம்... சிறக்கின்ற திட்டம்!
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் பறக்காத பட்டம்... சிறக்கின்ற திட்டம்!
ADDED : ஜன 16, 2024 02:44 AM
கல்லுாரிகளில் பட்டமளிப்பு விழா நடப்பது அனைவருக்கும் தெரியும்தானே... மனதை குதுாகலமாக வைத்துக்கொண்டு, புதிய கோணத்தில் ஆடைகளை வடிப்பதே, பேஷன் டிசைனிங். அந்த வகையில், 'பேஷன் டிசைனிங்' பயிலும், 'நிப்ட்-டீ' கல்லுாரி, அட்டகாசமான பட்டம் திருவிழாவை நிகழ்த்தியிருக்கிறது, மாறாத உற்சாகத்துடன்.
'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற வரிகளுக்கு ஏற்றாற்போல், புதிய நாட்களையும், செழிப்பான புதிய நம்பிக்கையூட்டும் நாட்களையும் வரவேற்கும் வகையிலும், இவ்விழா நடத்தியுள்ளதாக, கல்லுாரி பேராசிரியர்கள் பெருமை பொங்க கூறுகின்றனர்.
உலகம் உய்ய வழிகாட்டும் சூரிய பகவானுக்கு நன்றி பாராட்டும் வகையிலும், இவ்விழா நடத்தியுள்ளதாக, மாணவியரும் தங்கள் பங்கிற்கு குதுாகலிக்கின்றனர். 'நிப்ட்-டீ' கல்லுாரி மாணவர்கள், ஆடை வடிவமைப்பு கலைத்துறையினர் என்பதை நிரூபிக்கும் வகையில், வண்ணமயமான பட்டங்களை காண்பித்துள்ளனர்.
விதவிதமான பட்டங்களை, அழகாக வடிவமைத்து காட்சிப்படுத்தினர். துணிகளின் மூலமாகவும், நுாலிழைகள் மூலமாகவும், எம்ப்ராய்டரிங் மூலமாகவும், மணிகள், கலர் காகிதங்களை பயன்படுத்தியும் பட்டங்கள் தயாரித்தனர்.
பட்டாம்பூச்சி வடிவத்திலும், கழுகு வடிவத்திலும் மக்கள் சந்தோஷமாக வாழ வேண்டும்; நல்லதே நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் விழாவை நடத்தியுள்ளனர். கண் திருஷ்டிகள் கழிய வேண்டும்... பழையன கழிதல் வேண்டுமென, பூதம் மாதிரியான பட்டங்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.
மாணவ, மாணவியர் கண்ணும் கருத்துமாக உருவாக்கிய பட்டங்கள், வானில் பறக்கவிடப்படவில்லை. மாறாக, அனைவரின் காட்சிக்கும், கருத்துக்கும் தெரிய வேண்டுமென வைக்கப்பட்டிருந்தது. அதுவும், சாதாரண பட்டம் என்றாலும், நேர்த்தியான வடிவமைத்திருந்த பட்டங்களை, மரங்கள் மற்றும் செடிகளில், அழகாக பொருத்தி வைத்திருந்தது, கண்கொள்ளா காட்சியாக இருந்தது!

