/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி திருத்தலத்தில் ஆனை முகத்தோன் வழிபாடு: அருட்செல்வங்களுக்கு வராது தட்டுப்பாடு!
/
அவிநாசி திருத்தலத்தில் ஆனை முகத்தோன் வழிபாடு: அருட்செல்வங்களுக்கு வராது தட்டுப்பாடு!
அவிநாசி திருத்தலத்தில் ஆனை முகத்தோன் வழிபாடு: அருட்செல்வங்களுக்கு வராது தட்டுப்பாடு!
அவிநாசி திருத்தலத்தில் ஆனை முகத்தோன் வழிபாடு: அருட்செல்வங்களுக்கு வராது தட்டுப்பாடு!
ADDED : ஜன 26, 2024 11:51 PM

அரிய பொருளாகிய அவிநாசியப்பர் கோவிலில், 32 விநாயகர்களையும் தரிசனம் செய்வோருக்கு, 16 செல்வங்களும், இருமடங்காய் பெருகும் என்கின்றனர், ஆன்மிகத்தில் தழைத்தோங்கிய அடியார்கள்.
ஒரு கொம்பு, இரண்டு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், ஆறெழுத்து உடைய விநாயக பெருமான், மூலப்பரம்பொருளாக விளங்குகிறார். யானையை அடக்கும் கருவிகளான, பாசமும், அங்குசமும் தன் கைகளில் ஏந்தி, தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்பதை குறிப்பால் உணர்த்தியபடி, அருளாட்சி செய்கிறார். திருப்புக்கொளியூர் என்கிற அவிநாசித் திருத்தலத்தில், 32 விநாயகர்கள் பல்வேறு நிலைகளில் இருந்து அருள்பாலிக்கின்றனர். ஈசனை நாடி வரும் பக்தனை, முதலில் வரவேற்பதே, நர்த்தன விநாயகர்தான். அதற்கு பின்னரே, இடதுபுறமுள்ள செல்வ விநாயகரை சென்று வழிபடுகிறோம்.
பக்தர்களின் இன்னல்களையும், கடன், நோய், வழக்கையும் கரைக்கும் சக்தி, கொடிமரத்து விநாயகரிடம் இருக்கிறது. சூரியபகவான், சிவ சூரியனாக அருள்பாலிப்பதால், அங்கும் விநாயகப்பெருமான் சாந்த ரூபாக காட்சியளிக்கிறார். அறுபத்து மூவர் அருளாட்சி செய்யும் மண்டபத்திலும், கன்னிமூலை கணபதியாக காத்து நிற்கிறார் இந்த கணேசமூர்த்தி.
எந்தவொரு ஆலயமாக இருந்தாலும், கன்னி மூலையாகிய தென்மேற்கில், கன்னிமூல கணபதி சன்னதி அமைந்திருக்கும். அவிநாசி கோவிலில், கன்னிமூலையில், நிருருதி விநாயகர், தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார்.
இவரை வழிபட்ட பின்னரே, வடமேற்கில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் தண்டபாணியை தரிசிக்க முடியும். 'அரிய பொருளே அவிநாசியப்பா' என்று கரம் குவிப்பது போல், கருணாம்பிகை அம்மன் சன்னதியில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீராழிப்பத்தியின் தரைமட்டத்தில், சிறிய விநாயகர் காட்சியளிக்கிறார். அம்மையப்பரை சுற்றிவந்து, அண்ட சராசரங்களையும் ஆட்கொண்ட அருளாளனாகிய விநாயகர், ஐந்து அங்குலத்தில் காட்சியளிக்கிறார். 'கோவில் சிறிது எனும் கொண்டாட்டம் பெரிது' என்பது போல், குட்டி விநாயகரை கண்டுபிடித்து கை தொழுதால், மலைபோன்ற துயரமும் பனிபோல் உருகும் என்பது திண்ணம்.

