/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொறுப்பு உதவி கமிஷனர்களாக நிர்வாக அலுவலர்கள் நியமனம்
/
பொறுப்பு உதவி கமிஷனர்களாக நிர்வாக அலுவலர்கள் நியமனம்
பொறுப்பு உதவி கமிஷனர்களாக நிர்வாக அலுவலர்கள் நியமனம்
பொறுப்பு உதவி கமிஷனர்களாக நிர்வாக அலுவலர்கள் நியமனம்
ADDED : ஜூன் 06, 2025 06:22 AM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி முதல் மற்றும் இரண்டு ஆகிய மண்டலங்களுக்கு பொறுப்பு உதவி கமிஷனராக முருகேசன் பணியாற்றி வருகிறார். மூன்று மற்றும் நான்காவது மண்டலங்களுக்கு வினோத் உதவி கமிஷனராகப் பணியாற்றி வருகிறார்.
வினோத்துக்கு ஊட்டி நகராட்சி கமிஷனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அங்குள்ள அதிக பணிப் பளு காரணமாக கூடுதல் பொறுப்பு என்ற நிலையிலும் அவர் கட்டாயம் அங்கு அலுவலகப் பணிகளை மேற்ெகாள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், இங்கு பல்வேறு பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டது.இதுகுறித்து கடந்த வாரம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் மண்டல குழு தலைவர் கோவிந்தசாமி முறையிட்டார்.
இதையடுத்து, தற்போது பணி உயர்வு பெற்ற நிர்வாக அலுவலர் ராஜசேகர், மூன்றாவது மண்டலத்துக்கு பொறுப்பு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு நிர்வாக அலுவலர் சக்திவேல், 2வது மண்டலத்துக்கு பொறுப்பு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். முருகேசன் முதல் மண்டல அலுவல்களை மட்டும் கவனிப்பார்.