/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண் கண்காட்சிக்கு விவசாயிகள் செல்ல ஏற்பாடு
/
வேளாண் கண்காட்சிக்கு விவசாயிகள் செல்ல ஏற்பாடு
ADDED : ஜூன் 04, 2025 12:33 AM
உடுமலை,:
ஈரோடு விஜயமங்கலத்தில் நடக்கும் வேளாண் கண்காட்சிக்கு, உடுமலையிலிருந்து விவசாயிகளை அழைத்துச்செல்ல தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில், வரும் 11 மற்றும், 12ம் தேதி வேளாண் கண்காட்சி நடக்கிறது. உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், இரு நாட்களும், விவசாயிகளை கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ள விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் சிங்காரவேல், 95247 27052; சித்தேஸ்வரன், 88836 10449; ராஜமோகன், 95854 24502 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம், என உடுமலை தோட்டக்கலை உதவி இயக்குனர் கலாமணி தெரிவித்துள்ளார்.