/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் கலையரங்கம்: அமைச்சரிடம் மனு
/
பள்ளியில் கலையரங்கம்: அமைச்சரிடம் மனு
ADDED : ஜூன் 04, 2025 01:35 AM
அவிநாசி, ; தெக்கலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் கட்டித்தர அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
தெக்கலுார் பள்ளியில் நடந்த விழாவில், பங்கேற்ற அமைச்சர் சாமிநாதனிடம், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி வளர்ச்சி குழு, முன்னாள் மாணவர் பேரவை, பள்ளி மேலாண்மை குழு சார்பில் அளித்த கோரிக்கை மனு விவரம்:
பள்ளியில், 600 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அனைவரும் அமர்ந்து பள்ளி விழா, கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் முக்கியமான கூட்டங்களை நடத்துவதற்கு பள்ளி வளாகத்தில் கலையரங்கம் அத்தியாவசிய தேவையாக கருதப்படுகிறது. காவலாளி இல்லாததால் பள்ளியின் தளவாடப் பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும், மாலை பள்ளி முடிந்த பிறகு பள்ளி அறையிலும், மைதானத்திலும் சமூக விரோதிகளின் செயல்பாடுகளால் மாணவர்கள் அச்சமடைய வைக்கிறது. எனவே பள்ளிக்கு விரைவில் காவலரை (வாட்ச்மேன்) நியமிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சாமிநாதன், நடவடிக்கை எடுக்க, கலெக்டர் கிறிஸ்துராஜூக்கு பரிந்துரைத்தார்.