நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:த.மு.எ.க.,சங்க திருமுருகன்பூண்டி கிளை சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு கலை இரவு நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில் வேலா இளங்கோ கலை குழு சார்பில் தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் நாதஸ்வரம், பரதநாட்டியம், கிராமிய பாடல்கள் நடைபெற்றது. த.மு.எ.க.,சங்க மாநில துணைத்தலைவர் முத்து நிலவன் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக கிளை நிர்வாகி ஜீவபாரதி தலைமை தாங்கினார். ராஜகுரு வரவேற்றார். திருப்பூர் மாவட்ட செயலாளர் குமார், சந்தோஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.