/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கற்றல் செயல் முறையில் செயற்கை நுண்ணறிவு; பயிற்சி பட்டறையில் வல்லுனர்கள் விவாதம்
/
கற்றல் செயல் முறையில் செயற்கை நுண்ணறிவு; பயிற்சி பட்டறையில் வல்லுனர்கள் விவாதம்
கற்றல் செயல் முறையில் செயற்கை நுண்ணறிவு; பயிற்சி பட்டறையில் வல்லுனர்கள் விவாதம்
கற்றல் செயல் முறையில் செயற்கை நுண்ணறிவு; பயிற்சி பட்டறையில் வல்லுனர்கள் விவாதம்
ADDED : அக் 14, 2025 11:16 PM
பல்லடம்; பல்லடம் அரசு கல்லுாரியில் நடந்த சர்வதேச அளவிலான பயிற்சி பட்டறையில், கற்றல் செயல்முறைகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.
பல்லடம் அரசு கல்லுாரி ஆங்கிலத்துறை சார்பில், 'செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவார்ந்த முறைகளின் வாயிலாக ஆராய்ச்சி' என்ற தலைப்பில் மூன்று நாள் சர்வதேச பயிற்சி பட்டறை 'ஆன்லைனில்' நடந்தது. டெம்பிள்யோர்க் நிறுவனத்துடன் பல்லடம் அரசு கல்லூரி இணைந்து நடத்திய நிகழ்வை, கல்லூரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஆங்கிலத் துறை தலைவர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயிற்சி பட்டறையில், இந்தியா, நைஜீரியா, ஆப்கானிஸ்தான், கிரீஸ், குவைத், பிரேசில், பெரு, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட, 21 நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பங்கேற்று செயற்கை நுண்ணறிவில் மனித பங்குபெறல் மற்றும் சமூக நெறிமுறைகள் குறித்து பேசினர். கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில், செயற்கை நுண்ணறிவின் முக்கிய பங்களிப்பு குறித்தும் விளக்கினர்.
கற்றல் செயல்முறைகளை மேம்படுத்தும் விதமாக பயன்பாடுகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில், செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நீ பயிற்சி பட்டறையில் பங்கேற்ற, 75 ஆய்வாளர்கள் மற்றும் மாணவ மாணவியருக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. டாக்டர் திப்பு சுல்தான் மற்றும் டெம்பிள்யோர்க் தலைவர் இந்து ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

