/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறுபடை வீடு ஆன்மிக பயணம்: வயது வரம்பு உயர்த்த எதிர்பார்ப்பு
/
அறுபடை வீடு ஆன்மிக பயணம்: வயது வரம்பு உயர்த்த எதிர்பார்ப்பு
அறுபடை வீடு ஆன்மிக பயணம்: வயது வரம்பு உயர்த்த எதிர்பார்ப்பு
அறுபடை வீடு ஆன்மிக பயணம்: வயது வரம்பு உயர்த்த எதிர்பார்ப்பு
ADDED : ஜன 17, 2024 12:37 AM
பல்லடம்;அறுவடை வீடு ஆன்மிக பயணத்துக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என, பூசாரிகள் நலச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து, அச்சங்கத்தின் மாநில தலைவர் வாசு கூறியதாவது:
தமிழகத்தில், திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகளையும் ஒருசேர தரிசிக்கும் வாய்ப்பினை ஹிந்து அறநிலையத்துறை வழங்கி உள்ளது வரவேற்கத்தக்கது.
அதன்படி, 200 பக்தர்கள் வீதம், ஆண்டுக்கு ஆயிரம் பேர் கட்டணம் இன்றி தரிசிக்க ஹிந்து அறநிலையத்துறை வாய்ப்பு வழங்கியுள்ளது. எந்தவித கட்டணமும் இன்றி செல்லக்கூடிய இத்திட்டத்துக்கான வயது வரம்பு 60 முதல் 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வயது வரம்பை, 75ஆக உயர்த்துவதன் மூலம், எண்ணற்ற வயதான பக்தர்களும் பயன்பெறுவர்.
வாழ்நாளில் ஒருமுறையேனும் இது போன்ற வாய்ப்பு கிடைத்தது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எனவே, அறுபடை வீடு ஆன்மிக பயணத்துக்கான வயது வரம்பை, 75ஆக உயர்த்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

