/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோர்ட் வளாகத்திலுள்ள உடைந்த பர்னிச்சர் ஏலம்
/
கோர்ட் வளாகத்திலுள்ள உடைந்த பர்னிச்சர் ஏலம்
ADDED : ஜூன் 11, 2025 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்திலுள்ள பழைய உடைந்த, பயன்பாட்டில் இல்லாத மர, ஸ்டீல் சேர், டேபிள், பீரோ உள்ளிட்ட 74 பர்னிச்சர்களை, ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், மூடி முத்திரையிட்ட விலை பட்டியலை, வரும் ஜூலை 17ம் தேதிக்குள், முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருப்பூர் என்கிற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பிவைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.