/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் கமிஷன் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
/
தேர்தல் கமிஷன் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஜன 26, 2024 11:25 PM

உடுமலை: உடுமலையில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவங்கியது.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் கமிஷன் சார்பில் விழிப்புணர்வு வாகன பிரசாரம் நேற்றுமுன்தினம் துவங்கியது.
கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், கொடியசைத்து துவக்கி வைத்தார். உடுமலை தாசில்தார் சுந்தரம், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சையது ராபியம்மாள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த வாகனத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாக்களிப்பது குறித்து, எல்.இ.டி., திரை, கிராமிய கலை நிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம் தொகுதியிலுள்ள, கிராமங்கள், ஓட்டுச்சாவடிகளில், இந்த வாகனம் வாயிலாக பிரசாரம் மேற்கொள்ளப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

