நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-- நமது நிருபர் -
ஆண்களுக்கான அழகு கலை பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
திருப்பூர் கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் சதீஸ்குமார் கூறியிருப்பதாவது:
இப்பயிற்சி மையத்தில் ஆண்களுக்கான அழகு கலை பயிற்சி வகுப்பு துவங்க உள்ளது. முப்பது நாள் நடைபெறும் இப்பயிற்சி முற்றிலும் இலவசம். வரும், 28ம் தேதி இதற்கான நேர்காணல் நடத்தப்படும்.
பயிற்சியில் சேர விருப்பமும், தகுதியும் உடையவர்கள், 'கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்', வஞ்சியம்மன் கோவில் எதிரில், முதலிபாளையம் பிரிவு, காங்கயம் ரோடு, விஜயாபுரம், திருப்பூர், என்ற முகவரிக்கு நேரில் வரவும்.
விபரங்களுக்கு, 94890 - 43923, 90804 - 42586, 99525 - 18441 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.