/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பா.ஜ., பேனர் கிழிப்பு: போதை ஆசாமி கைது
/
பா.ஜ., பேனர் கிழிப்பு: போதை ஆசாமி கைது
ADDED : பிப் 25, 2024 12:57 AM
திருப்பூர்;திருப்பூரில், பா.ஜ., பிளக்ஸ் பேனரை கிழித்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
பிரதமர் மோடி பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் 27ம் தேதி, திருப்பூர் மாவட்டம், பல்லடம் வருகிறார். அவரை வரவேற்கும் வகையில், திருப்பூரில் முக்கியமான சந்திப்பு பகுதிகளில் பா.ஜ., வினர் பேனர்களை வைத்துள்ளனர்.
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வரவேற்று வைத்துள்ள பேனர்கள் சில கிழிக்கப்பட்டன. தகவலறிந்து சென்ற பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் பேச்சு நடத்தினர். 'கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்த பின், அனைவரும் கலைந்து சென்றனர்.
விசாரணையில், ரோட்டோரம் தங்கியிருந்த போதை ஆசாமி, திருச்சியை சேர்ந்த செந்தில், 44 என்பவர் பேனரை கிழித்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.