sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

கரை புரண்டோடுது லஞ்சம்: 'நேர்மை' ஆபீசர்களுக்கு பஞ்சம்!

/

கரை புரண்டோடுது லஞ்சம்: 'நேர்மை' ஆபீசர்களுக்கு பஞ்சம்!

கரை புரண்டோடுது லஞ்சம்: 'நேர்மை' ஆபீசர்களுக்கு பஞ்சம்!

கரை புரண்டோடுது லஞ்சம்: 'நேர்மை' ஆபீசர்களுக்கு பஞ்சம்!


ADDED : செப் 23, 2025 05:56 AM

Google News

ADDED : செப் 23, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''வா மித்து, உன்னைத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்,'' என்ற சித்ரா, மித்ராவை வரவேற்றாள்.

மேஜை மீதிருந்த செய்தித்தாளை புரட்டினாள். முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டும் பிரச்னை தொடர்பான செய்தி கண்ணில் பட, ''என்னக்கா... குப்பை பிரச்னைக்கு ஒரு முடிவே வராது போலயே. அங்க மட்டுமில்ல, எந்தவொரு பாறைக்குழியிலயும் குப்பைக் கொட்டக்கூடாதுங்கற கோரிக்கையை வலியுறுத்தி, பொதுமக்களை திரட்டி போராட்டத்தை முன்னெடுக்கிற சிலர் கலெக்டர், கார்ப்பரேஷன் கமிஷனரையும் சந்திச்சு பேசியிருக்காங்க,''

''பாறைக்குழியில கொட்டாம வேற எங்கதான் கொட்றது; நீங்களே ஒரு ஐடியா சொல்லுங்க''ன்னு, ஆபீசர்ங்க கொஞ்சம் கடுப்பாவே பேசியிருக்காங்க. இதை கேட்ட சிலர், 'ஒரு பிரச்னையை எப்படி சமாளிக்கணும், எப்படி தீர்வு காணணும்ன்னு, ஆபீசர்களுக்கு நல்லாவே தெரியும். இந்த குப்பை பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க முடியாம, எங்ககிட்ட போய் ஐடியா கேட்டா எப்படி?,' நொந்துக்கிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

ஓயாத கோஷ்டி கானம் ''ஆளும்கட்சி பொறுப்புல இருந்துட்டு, இந்த பிரச்னையை கூட சரி செய்ய முடியலைன்னா எப்படி?'' என, கார்ப்பரேஷன் வி.ஐ.பி.யை சலித்துக் கொண்டாள் சித்ரா, ''அடப்போ மித்து, நீ வேற. டிஸ்டிரிக்ட்ல, கட்சியோட செல்வாக்கை வளர்க்கத்தான், ஏகப்பட்ட பொறுப்புகள்ல நிர்வாகிகளை கட்சித்தலைமை நியமிச்சிருக்கு. ஆனா, கோஷ்டி சண்டையை சரிக்கட்டவே நேரம் போதல. ஏற்கனவே, கட்சியோட வடக்கு மாவட்டத்துக்குன்னு ஒரு கட்சி ஆபீஸ் இருக்காம்,''

''இதுல, வடக்கு பகுதிக்கு பொறுப்பாளரான 'கோல்டுகிங்' தனக்குன்னு ஒரு ஆபீசை, போயம் பாளையத்துல திறந்திருக்காரு. திறப்பு விழாவை தடபுடலா நடத்தினாராம். ஆனா, கட்சியோட ஏகப்பட்ட பேரு கலந்துக்கலையாம். மொத்தமுள்ள நாலு பகுதி செயலாளர்களும், 27 வார்டுகளில், 23 செயலாளர்களும் 'ஆப்சென்ட்'டாம். இதில என்ன கொடுமைன்னா, பத்திரிகையில் பேர் போட்டவர்களில், மொத்த 90 சதவீதம் பேர் போகலையாம். இந்த கோஷ்டி அரசியலை கண்கூடா பார்த்த, தலைமையில இருந்து வந்த மூத்த நிர்வாகியும் அட்வைஸ் பண்ணிட்டு போனாராம்,'' என்றாள்.

''வேறெந்த பிரச்னையை கூட முடிச்சிடலாம். ஆனா, இந்த ஆளுங்கட்சி கோஷ்டி பிரச்னையை மட்டும் முடியாது போல...'' என சிரித்த மித்ரா, ''தோழர் கட்சியில...'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.

''அக்கா, தோழர் கட்சி லோக்சபா வி.ஐ.பி. மகன், ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு நிகழ்ச்சி நடத்தினாருல்ல. அது தொடர்பா, 'பிரஸ் மீட்' வச்சப்போ, 'தமிழ்நாட்ல அங்கங்க ஆணவக்கொலை நடக்குது. தீண்டாமை சுவர் இருக்கு. அத பத்தி நீங்க என்ன சொல்றீங்க?'ன்னு கேட்டதுக்கு, ஒன்னுமே சொல்லாம வாயடைச்சு போயிட்டாராம்,'' என்றாள்.

''இப்பெல்லாம் அரசியல்வாதிகளை விட, ஆபீசர்ஸ் பண்ற அரசியல் ரொம்ப பெரிசு...'' என பேச்சை மாற்றினாள் சித்ரா.

''அப்படியா, எதை வைச்சு சொல்றீங்கா?'' ஆர்வமானாள் மித்ரா.

'ஈசி' வாங்கறது 'ஈஸி' இல்ல! ''பல்லடம் ரெஜிஸ்டர் ஆபீசில, ஈ.சி., வாங்கறது, அவ்வளவு 'ஈஸி'யான விஷயமில்லையாம் மித்து. கமிஷனை முன்கூட்டியே கொடுத்தா, மூணே நாளில ஈ.சி., கிடைச்சிடுமாம். இல்லைன்னா, 'இன்று போய் நாளை வாங்கற' கதையா அலைய விட்டுடுவாங்களாம். உடனே வேணும்னா, அதுக்கு 'ஸ்பெஷல் கவனிப்பாம்'. இப்படி, காசு மேல காசு கொட்றதால, அந்த ஆபீஸ்க்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வர்றதுக்கு ஏகப்பட்ட பேர் போட்டி போடறாங்களாம்...'' என்ற சித்ரா தொடர்ந்தாள்.

''அங்கமட்டுமில்லாம, அந்த ஊர் ரெவின்யூ டிபார்ட்மென்ட்லேயும் இதே கதையாம். பட்டா மாறுதல், பேர் மாற்றம், அது, இதுன்னு, எந்த வேலையா போனாலும் மண்டலத்தை கவனிக்கிற 'சாமி' ஆபீசரோட ஆசி வேணுமாம். அவருக்கு 'காணிக்கை' கொடுத்தா தான், வேல நடக்குதுன்னு எல்லாருமே சொல்றாங்க'' என்றாள்.

''சர்வே டிபார்ட்மென்ட்ல, வேலை செய்ற ஒருத்தரு, காலையில, 6:00 மணிக்கெல்லாம் ஆபீசுக்கு வந்துடறாராமே,'' என அவிநாசி மேட்டர் சொன்னாள் மித்ரா.

''அவ்வளவு சின்சியரான ஆபீசரா?'' குறுக்கிட்டாள் சித்ரா.

''உங்க ஆர்வக்கோளாறுக்கு அளவே இல்லீங்களா... சர்வே செய்யணும்ன்னு வர்றவங்களோட 'லேண்ட்'க்கு போய் சர்வே எல்லாம் செஞ்சும் கொடுத்துடறாராம். அவரோட பேருக்கு ஏத்த மாதிரி கலெக்ஷனிலும் 'அரசன்' என்றே பேர் எடுத்துட்டார். ஏக்கருக்கு, 5 ஆயிரத்துல இருந்து, 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும் 'ரேட் பிக்ஸ்' வசூல் அள்ளிடறாராம். அவரு மேல நிறைய கம்ப்ளைன்ட்ஸ் வந்ததால, உடுமலைக்கு டிரான்ஸ்பர் பண்ணியிருக்காங்க. அவருக்கு மேலிடத்துல இருக்கற செல்வாக்கை பயன்படுத்தி, அடுத்த ரெண்டாவது நாளே அவிநாசிக்கு வந்துட்டாருன்னா பார்த்துக்கோயேன்,'' என்றாள் சித்ரா.

ஆள விடுங்க சாமி... ''அக்கா, சிட்டிக்குள்ள ரெண்டு மணி நேரத்துல, ஒரு லட்சம் அளவுக்கு அபராதம் வசூல் பண்றாருன்னு, ஒரு குட்டி ஆபீசர் மேல ஆளுங்கட்சி வி.ஐ.பி. ஒருத்தரு, புகார் சொன்னாருல்ல. இதுசம்மந்தமா விசாரிக்க, பெரிய ஆபீசர் உத்தரவு போட்டிருக்காரு. விசாரணையில் தான் உண்மை தெரிஞ்சதாம். வாகன தணிக்கையின் போது, ஒரு வாகனத்துக்கு ஆபீசர் 'பைன்' போடறப்போ, மண்டல வி.ஐ.பி. மொபைல் போனில் பேசி, வாகன ஓட்டிக்கு ஆதரவா 'ரெக்கமண்ட்' பண்ண 'ட்ரை' பண்ணியிருக்காரு. ஆனா, 'அவர்க்கிட்ட பேச முடியாது'ன்னு ஆபீசர் சொல்லிட்டாராம். கடுப்பான மண்டல வி.ஐ.பி. அந்த ஆபீசர் மேல ஒரு புகாரை அடிச்சு விட்டிருக்காருன்னு சொல்றாங்க...'' என்றாள் மித்ரா.

''அதேபோல, பூண்டி முனிசிபாலிட்டில, ஏகப்பட்ட போஸ்டிங் காலியா இருக்காம். இருக்கிறவங்களும், அவங்க டேபிளுக்கு வர்ற பைலை மட்டும் தான் பார்க்குறாங்களாம். 'கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி, உங்க அசிஸ்டெண்ட் ஆபீசர்ங்க டேபிள்ல இருக்கற பைலையும் பார்க்கலாம்ல'ன்னு கேட்டா. 'அப்படியெல்லாம் செய்ய முடியாது, அவங்க அவங்க வேலையை அவங்க தான் பார்க்கணும். அதுக்கு தானே, லட்சத்துல சம்பளம் வாங்கறாங்கன்னு சொல்றாங்களாம்...''

''இப்போ இருக்கற ஆபீசர் கூட, பக்கத்து நகராட்சியில இருந்து தான், பொறுப்பு அடிப்படையில போட்டிருக்காங்களாம். 'என்னோட ரெகுலர் முனிசிபாலிட்டி வேலையே தலைக்கு மேல இருக்கு. இதுல, இங்க வந்தும் வேல செய்றது, ரொம்ப டார்ச்சரா இருக்கு. நீங்க வேணும்னா, மேல பேசி, 'ரெகுலர் போஸ்ட்டிங்' வாங்க வேண்டியது தானேன்னு, ஆளுங்கட்சி வி.ஐ.பி.க்கு 'அட்வைஸ்' பண்றாராம்...'' சித்ரா நிலைமையை விளக்கினாள்.

''அவங்க சொல்றதும் ஒரு வகையில 'கரெக்ட்' தானே. எந்த 'சீட்'லேயும் ஆபீசர்ஸ் இல்லைன்னா எப்படி தான் வேல நடக்கும்...'' என்ற மித்ரா, ''காங்கயம் முனிசிபாலிட்டில, ஆளுங்கட்சி கவுன்சிலரு ஒருத்தரோட மகன், புறம்போக்கு நிலத்தை அபகரிச்சு வீடு கட்டிய விவகாரம், ரெவின்யூ டிபார்ட்மென்ட் விசாரணையில இருக்காம். ஆனா, எந்த முடிவும் எடுக்காம, அப்படியே கெடப்புல போட்டு வச்சிருக்காங்களாம். அந்த வீட்டுக்கு, வரி ரசீது கூட இனி கொடுக்கலைன்னு சொல்றாங்க. இதய 'பஞ்சாயத்து' பேசி முடிக்க, மினிஸ்டரோட 'செல்லமான' பேர் வச்ச உதவியாளரு களத்தில் இறங்கியிருக்கிறாராம்,'' என்றாள் மித்ரா.

''தாராபுரம் மதுவிலக்கு ஏட்டய்யா ஒருத்தரு, அங்க இருக்கற 'டாஸ்மாக்' ஊழியர்ங்க கிட்ட, 'எங்க ஆளுங்க யாரு வந்து என்ன சரக்கு கேட்டாலும், கொடுக்கணும்; இல்லைன்னா 'கேஸ்' போட்டுடுவேன்னு மிரட்டி வச்சிருக்காராம். இதனால, என்ன செய்றதுன்னு தெரியாம, எல்லா போலீஸ்காரங்களும் ஓசியில பாட்டில் வாங்கிட்டு போறாங்களாம்,''

தலைவிரித்தாடும் 'ஈகோ' சித்ரா சொன்னதை கேட்ட, மித்ரா, ''அக்கா அங்க மட்டுமில்ல. ரூரல் டிஸ்ட்ரிக்ட் புல்லா இப்டித்தான் இருக்கு. கொஞ்ச நாள் முன்னாடி, போயம்பாளையத்துல ரேஷன் அரிசியை கடத்திட்டு போன ஒருத்தர பத்தி, உணவு பாதுகாப்புத்துறைக்கும், போலீசுக்கும் தகவல் சொல்லியிருக்காங்க. அதுக்குள்ள அரிசி கடத்தல் ஆசாமி, வண்டியை போட்டுட்டு, ஓடிட்டாராம்,''

''ரெண்டு மணி நேரம் கழிச்சு போன, சிவில் சப்ளை ஆபீசர்ஸ், 'அந்த ஆளை ஏன் விட்டீங்க. பிடிச்சு வச்சிருக்கலாமே'ன்னு சொல்லிட்டு, டூவீலரை எடுத்துட்டு போய்ட்டாங்களாம். மறுபடியும் கொஞ்ச நேரம் கழிச்சு அங்க வந்த போலீஸ்காரங்க, 'அவங்க கிட்ட ஏன் புகார் சொன்னீங்க; நாங்க தானே ஆக்ஷன் எடுக்கணும்'ன்னு சொல்லியிருக்காங்க,''

''இதென்ன வம்பா போச்சு... அரிசி கடத்தலை தடுத்து நிறுத்தினது ஒரு தப்பா. மொதல்ல இந்த மாதிரி புகாரையெல்லாம் யாரு விசாரிக்கணும்ன்னு, உங்களுக்குள்ள முடிவு பண்ணிட்டு வாங்கன்னு, 'பப்ளிக்' சொன்னாங்களாம்...'' என்றாள் மித்ரா.

''எல்லா இடத்திலும், இந்த 'ஈகோ' புகுந்துட்டு பெரிய பிரச்னை...'' என்ற சித்ரா, ''மித்து, அவிநாசி ஆளுங்கட்சி நகர பொறுப்பிலுள்ள மூத்த நிர்வாகி ஒருத்தர், பில்டிங் கட்ட பிளான் அப்ரூவல் கேட்டு போயிருக்கார். அங்கிருந்த முனிசிபாலிட்டி வி.ஐ.பி.யோட கணவர், 'அப்ரூவல் பண்ண ஆபீசர்களுக்கு பணம் கொடுத்திடுங்க. எனக்கு எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டாராம்...''

''வேற வழி தெரியாம, மூத்த நிர்வாகியும், 30 ஆயிரம் கொடுத்து, அப்ரூவல் ஆர்டர் வாங்குனாராம். இதுலென்ன கொடுமைன்னா, பணம் வேண்டாம்னு சொன்ன, 'பொன்னான' நபருக்கும் பங்கு போனதாம். ஆளுங்கட்சி மூத்த நிர்வாகிக்கே இந்த நெலைமைன்னா, சாதாரண சாமானியர் கதி என்னவாகும்னு, ஆளுங்கட்சி நிர்வாகிகளே பேசறாங்களாம்...''

''யாரா இருந்தா எனக்கென்ன, எனக்கு வேண்டியது பணம்னு, எல்லா டிபார்ட்மென்டிலும் லஞ்சம் தலைவிரித்தாடுதுங்க்கா. ஓகே நான் கெளம்பறேன்'' என்ற மித்ராவை, ''அஞ்சு நிமிஷம் இருடி. பக்கத்துல தனலட்சுமிக்கா வீட்டில நவராத்திரி கொலு வச்சிருக்காங்க. பாத்துட்டு போவியாம்,'' என்றதும், மித்ரா எழுந்தாள்.






      Dinamalar
      Follow us