/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தலைமை செயலர் டி.ஜி.பி.,க்கு 'நோட்டீஸ்'
/
தலைமை செயலர் டி.ஜி.பி.,க்கு 'நோட்டீஸ்'
ADDED : மே 28, 2025 02:53 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், கரைப்புதுாரில் உள்ள சாய ஆலை நிறுவனத்தில், மே 19ம் தேதி செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி, மூவர் பலியாகினர். ஊடகங்களால் இச்செய்தியை அறிந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து, விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துள்ளதாக, தெரிவித்துள்ளது.
ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'கழிவுநீர் குழாய்களை சுத்தம் செய்வதற்கு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிற நிறுவனங்களின் கடமை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
'இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென என, தமிழக அரசின் தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.