/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.2.11 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
/
ரூ.2.11 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
ADDED : ஜூன் 08, 2025 03:56 AM
வெள்ளக்கோவில்: தேங்காய் ஏலத்தில், முத்துார் சுற்றுப்பகுதி விவசாயிகள் 57 பேர், தங்கள் தோட்டங்களிலிருந்து, 9,226 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 70.60 ரூபாய்; இரண்டாம் தரம், ஒரு கிலோ 43.05 ரூபாய் என, சராசரியாக 63.30 ரூபாய்க்கு ஏலம் போனது. அவ்வகையில், மொத்தம், 3.7 டன் தேங்காய், 2.11 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
கொப்பரை ஏலத்துக்கு மொத்தம், 807 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டது. அதிகபட்சம், கிலோ 215.35 ரூபாய்; குறைந்தபட்சம், 110.20 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 807 கிலோ கொப்பரை, 1.62 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது; 35 விவசாயிகள் பங்கேற்றனர் என, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சங்கீதா தெரிவித்தார்.