/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடிந்து விழும் நிழற்கூரை; அலட்சியத்தில் பேரூராட்சி
/
இடிந்து விழும் நிழற்கூரை; அலட்சியத்தில் பேரூராட்சி
இடிந்து விழும் நிழற்கூரை; அலட்சியத்தில் பேரூராட்சி
இடிந்து விழும் நிழற்கூரை; அலட்சியத்தில் பேரூராட்சி
ADDED : அக் 14, 2025 09:50 PM

உடுமலை; நிழற்கூரை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தும் மக்கள் பாதுகாப்பில், பேரூராட்சி நிர்வாகத்தினர் அலட்சியம் காட்டுவதாக ருத்ரபாளையம் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மடத்துக்குளம் சங்கராமநல்லுார் பேரூராட்சிக்குட்பட்டது ருத்ரபாளையம். இக்கிராமத்துக்கு, உடுமலை, பழநியில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதிக மக்கள் தொகை உள்ள இந்த கிராமத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயம் சார்ந்த பணிகளுக்காக மக்கள் வந்து செல்கின்றனர். அரசுப்பள்ளி அருகேயுள்ள பஸ் ஸ்டாப்பையே மக்கள், மாணவ, மாணவியர் பயன்படுத்துகின்றனர்.
அங்குள்ள நிழற்கூரை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிய துவங்கியுள்ளது. மழை சீசன் துவங்கியுள்ள நிலையில், மக்கள் அச்சத்துடன் நிழற்கூரையில் நிற்க வேண்டியுள்ளது.
நிழற்கூரையை புதுப்பித்து கட்ட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
விபத்து ஏற்படும் முன், மக்கள் பாதுகாப்பில் காட்டும் அலட்சியத்தை கைவிட்டு, நிழற்கூரையை பராமரிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

