/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தலைக்காவிரியில் இருந்து அவிநாசிக்கு... தீர்த்தம் எடுத்து வர புறப்பட்ட பக்தர்கள்

ADDED : ஜன 27, 2024 11:35 PM

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக தல காவேரியில் இருந்து தீர்த்த குடம் எடுக்க 300 பேர் புறப்பட்டனர்.
அவிநாசி கோவில் கும்பாபிஷேகம் வரும் 2ம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக கர்நாடகா மாநிலம், தலைக்காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வர பக்தர்கள், 300 பேர் கொங்கு கலையரங்கில் இருந்து, 10 வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இன்று இரவு தலைக்காவிரியில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து திரும்புகின்றனர்.
நாளை அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ரத வீதிகள் வழியாக தீர்த்தக்குடம் ஊர்வலமாக புறப்பட்டு, அவிநாசி கோவிலுக்கு செல்கின்றனர். தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியை கொங்கு கலையரங்க தலைவர் பொன்னுக்குட்டி, அண்ணா உணவகம் பூபதி, புதுப்பாளையம் தங்கவேல், ராயம்பாளையம் பார்த்திபன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.