/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?
/
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?
ADDED : ஜன 25, 2024 09:39 PM
திருப்பூர்:தமிழக ரேஷன் கடைகளில், தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்கக்கோரி, தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் முடிவெடுத்துள்ளன.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கம், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், ஐக்கிய விவசாயிகள் சங்கம், இந்திய தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பு அமைப்புகள் இணைந்து, அடுத்த மாதம், 7ம் தேதி, சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முன், காலவரையற்ற மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
இது குறித்து, கூட்டமைப்பினர் கூறியதாவது:
இந்தியா, விவசாய நாடாக இருப்பினும், 72 சதவீத எண்ணெய் வித்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளுக்கு எவ்வித ஊக்குவிப்பு, மானியமும் அரசின் சார்பில் வழங்கப்படுவதில்லை.
மாறாக, இந்தோனேஷியா, மலேஷிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை லிட்டர், 100 ரூபாய்க்கு வாங்கப்பட்டு, 30 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் விற்கப்படுகிறது. ஆண்டுதோறும், 1.96 லட்சம் லிட்டர் பாமாயிலை மாநில அரசு கொள்முதல் செய்து வருகிறது. ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாயை மானியத்திற்கென செலவிடுகிறது.
மத்திய அரசும், பாமாயிலுக்கு எதிரான இறக்குமதி வரியை, 44 சதவீதத்தில் இருந்து, 32 சதவீதமாக குறைத்து, பாமாயில் விற்பனையை ஊக்குவித்து வருகிறது. தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில், 66வது வாக்குறுதியாக, 'தேங்காய் எண்ணெய், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விற்கப்படும்' என கூறப்பட்டுள்ளது. 'உடல் நலனுக்கு நன்மை தரும் உள்நாட்டு எண்ணெயை, ரேஷனில் விற்பனை செய்ய வேண்டும்' என, கடந்த, 30 ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த, 2023ல், 20 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய், தற்போது, 10 ரூபாய்க்கு மட்டுமே விலை போகிறது. இதனால், 20 லட்சம் தென்னை விளையும், 22 மாவட்டங்களில் உள்ள, 20 லட்சம் தென்னை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர். எனவே, அரசின் கவனத்தை ஈர்க்க, தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

