/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டி.எஸ்.பி., ஜீப் டிரைவர் பலியான விவகாரம்; விசாரணை நடத்த மா.கம்யூ., வலியுறுத்தல்
/
டி.எஸ்.பி., ஜீப் டிரைவர் பலியான விவகாரம்; விசாரணை நடத்த மா.கம்யூ., வலியுறுத்தல்
டி.எஸ்.பி., ஜீப் டிரைவர் பலியான விவகாரம்; விசாரணை நடத்த மா.கம்யூ., வலியுறுத்தல்
டி.எஸ்.பி., ஜீப் டிரைவர் பலியான விவகாரம்; விசாரணை நடத்த மா.கம்யூ., வலியுறுத்தல்
ADDED : ஜன 11, 2024 07:07 AM
திருப்பூர் : அவிநாசி டி.எஸ்.பி., டிரைவர், விபத்தில் பலியானது குறித்து விசாரிக்க மா.கம்யூ., வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் அறிக்கை:
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த முதல்நிலை காவலர் அருள்குமார், அவிநாசி டி.எஸ்.பி.,க்கு ஜீப் டிரைவாக பணியாற்றி வந்தார். கடந்த, 5ம் தேதி பெருமாநல்லூரில் இருந்து, பயணிகள் ஆட்டோவில் (பதிவு எண்: டிஎன் 66 ஏஎம் 1912) திருநெல்வேலிக்கு மற்றொரு போலீஸ்காரர் வெங்கடாசல மூர்த்தியுடன் சென்றார்.
அப்போது, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரோட்டில் சாலைத் தடுப்பில் மோதி ஏற்பட்ட விபத்தில், பள்ளத்தில் சிக்கி அருள்குமார் இறந்தார். அவிநாசி டி.எஸ்.பி.,யாக உள்ள பவுல்ராஜின் உறவினருக்காக, திருப்பூரில் ஆட்டோவை வாங்கி, அதனை அவரிடம் ஒப்படைக்க திருநெல்வேலிக்கு செல்லும்படி டி.எஸ்.பி. பவுல்ராஜ் கூறியதால், அருள்குமார் ஆட்டோவை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
காவல் அதிகாரியின் தனிப்பட்ட சொந்த பணிக்காக, போலீசாரை அனுப்பி இருந்தால் அது தவறானது. அருள்குமார் உயிரிழப்பு குறித்து பாரபட்சம் இல்லாத முழுமையான விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்.
இதில் தொடர்புடைய அதிகாரி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த போலீஸ்காரர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கி, அவரது இரு குழந்தைகளின் கல்விக்கும் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

