/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கி காலியிடம் நிரப்ப ஊழியர்கள் எதிர்பார்ப்பு
/
வங்கி காலியிடம் நிரப்ப ஊழியர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 15, 2025 11:27 PM

திருப்பூர்; அகில இந்திய வங்கி ஊழியர் சங்க திருப்பூர் மாவட்ட மூன்றாவது மாநாடு, ஊத்துக்குளி ரோட்டிலுள்ள இந்திய கம்யூ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிபாபு தலைமை வகித்தார். எம்.பி., சுப்பராயன், வங்கி ஊழியர் சங்க கொடி ஏற்றினார்.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம், பொருளாளர் ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர், கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது. தனியார் வங்கிகளை, பொதுத்துறை வங்கிகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். ஆள் குறைப்பு நடவடிக்கைகளால், வங்கிகளில் காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளன; அப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க கூடாது என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வங்கி ஊழியர் சங்க இணை செயலாளர் ராமராஜூ உள்பட வங்கியாளர்கள் பங்கேற்றனர்.