ADDED : ஜன 26, 2024 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்: பெருமாநல்லுார் ஊராட்சி சார்பில், கிராமசபை கூட்டம் பொடாரம் பாளையம், ஏ.டி., காலனி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
பா.ஜ., சார்பில், பொடாரம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். வாரச்சந்தை வளாகத்தில், இலங்கை தமிழர்களுக்கு முறையாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இ.கம்யூ கட்சி சார்பில், ரேஷன் கடையில் 250 பேருக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்படவில்லை. அரசு கொடுப்பதை முறையாக வழங்க வேண்டும் என்றனர்.
மகளிர் உரிமை தொகை வர வில்லை எனபெண்கள் பலர் புகார் தெரிவித்தனர்.

